Sunday, October 2, 2022
Home Health & Fitness Traditional Treatments மகிழ்ச்சியும், ஆயுளும், ஐஸ்வர்யமும் பொங்கிட!

மகிழ்ச்சியும், ஆயுளும், ஐஸ்வர்யமும் பொங்கிட!

மகிழ்ச்சியும், ஆயுளும், ஐஸ்வர்யமும் பொங்கிட முதலில் நாம் மண்டலம் என்றல் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
மண்டலம்: ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள், பட்சம் என்பது 14 நாட்கள். பட்சங்கள் இரண்டு வகைப்படும். சுக்லபட்சம், கிரிஷ்ணபட்சம். இவை இரண்டும் சந்திரனின் நிலைப்பாட்டினை கொண்ட காலத்தின் கணக்காகும்.அமாவாசையிலிருந்து பௌர்ணமி வரை சுக்லபட்சம். பௌர்ணமியிலிருந்து அமாவாசை வரை கிரிஷ்ணபட்சம்.
இந்த பூமியின் நிலைப்பாட்டிற்க்கு சந்திரனின் சுழற்சி ஒரு பட்சத்தில் 180 டிகிரி. அப்படி 360 டிகிரி ஒரு சுழற்சியை முழுமை பெறச் செய்யும். சந்திரனின் கால ஓட்டம். இந்தப் பட்சங்களே மருந்து எடுக்கொள்ளுவதற்கு உகந்த காலமாக சொல்லப்படுகிறது.
ஏனெனில் இந்த நாட்களில் சந்திரனின் ஈர்ப்பு சக்தி பூமியிலும், பூமியில் உள்ள அணைத்து வஸ்துக்களிலும் செலுத்தப்படுகிறது. அதன் விளைவாக கடலில் பேரலைகள் தோற்றம் உண்டாகிறது. மனிதர்களின் உணர்வுகள் மிக அதிகமான நிலையில் தூண்டப்படுகிறது. தூண்டப்பட்ட உணர்வுகளுக்கு அடிமைப்பட்டு அவன் சீரழிந்துவிடாமல் தடுப்பதற்காக வேண்டி விரதம் என்ற பெயரில் பௌர்ணமி, அமாவாசை போன்ற நாட்களில் கடிவாளம் பூட்டப்பட்டது.
இப்படிப்பட்ட உன்னதமான சந்திர கால நிர்ணயத்தை எப்படி உபயோகப்படுத்துவது என்று பார்ப்போம்.
“காலையில் இஞ்சி கடும்பகல் சுக்கு
 மலையில் கடுக்காய் மண்டலம் தின்றிட
 கோலினை ஊன்றிக் குறுகி நடப்பவர்
 கோலினை வீசி குலவித் திரிவரே”
இஞ்சி, சுக்கு, கடுக்காய் இம்மூன்றையும் நேரம் அனுசரித்து உட்கொண்டால் வினை தீர்க்கும் மருந்தாகவும், வல்வினை வராமல் தடுக்கும் காவலனாகவும் பயன்பட்டு நற்பலனை தருகிறது.
காலையில் ஒருவன் உறக்கத்திலிருந்து எழுந்தவுடன் அவனுக்கு தேவையானது உஷ்ணம், அதுவரை நிலவி வந்தது வாதம். இந்த உஷ்ணத்தை உடனடியாக வழங்கி வாதமென்ற உடல் விறைப்பை மாற்றி செயலாற்றத் தூண்டுகிறது இந்த இஞ்சி.
சூரியன் வெயிலாக காய்ச்சி நம் உடலை உஷ்ணப்படுத்தி வியர்வை ஏற்படுத்துகிறான். ஒன்றிலிருந்து ஒன்று வெளிவரும் போது மற்றொன்று குளிர நேரிடுகிறது. இதுதான் இயற்கையின் விதி. இவ்வாறு புற உடலில் ஆவி, உடலின் உள்ளே குளிர். எனவே, சரீர சமநிலை மாறிவிடும். இந்த நிலையை சரிக்கட்ட ஏற்படும் தானான முயற்சியின் வெளிப்பாடு தான் கபம். இந்த கபம் ஏற்படாமல் தடுக்கவும், ஏற்பட்ட கபத்தை அகற்றவும் கடும்பகலில் சுக்கு.
பகல் முழுவதும் உடல் உழைப்பால் கலைத்துவிடும், நம் வயிற்றுக்குள் இருக்கும் அனைத்து மலபந்தங்களோடு\, உறாவிடி, விளையாடி, காலையில் நாம் எழுந்தவுடன் மலத்தை வெளியேற்றி, வயிற்றை சுத்தமுறச் செய்வதுதான் கடுக்காயின் வேலை.
ஆகா காலவரையான மண்டலம் என்ற மூன்று பட்சங்கள் தொடர்ந்து சேர்ந்து வந்தால் முதியவனும் கோலை வீசிவிட்டு இளங்காளையாக மாறி விடுவான்.
மேற்சொன்ன இஞ்சி, சுக்கு, கடுக்காய் இம்மூன்றையும் மருந்தாக கொண்டு வாழ்நாளை விருத்தியாக்கச் செய்து சுகமுடன் வாழலாம்.

Any information published on this website is not intended or implied to be a substitute for professional medical advice, diagnosis or treatment. All content, including text, graphics, images and information, contained on or available through this website id for general information purpose only. You should not take any action before consulting with a healthcare professional.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments