Tuesday, April 26, 2022
Home Health & Fitness Herbs & Medicines நெல்லி-மரபுசார் மருத்துவம்

நெல்லி-மரபுசார் மருத்துவம்

அனைவருக்கும் எளிதாக குறைந்த விலையில் கிடைக்ககூடிய ஒரே காயகற்ப மூலிகை நெல்லியை நன்றாக உலர்த்தியபின் கருப்பு நிறமாக மாறும். இதற்கு நெல்லி முள்ளி பெயர்.
நெல்லி கண்களுக்கு குளிர்ச்சி தரும். ஜீரண சக்தியை தூண்டும். சிறுநீர் பெருக்கியாக செயல்படும். குடல் வாயுவை அகற்றும். பேதியைத் தூண்டும். உடல் சூடு தணிக்கும்.எலும்புருக்கி நோய், பெரும்பாடு, வாந்தி, வெல்ல, ஆண்குறிக் கொப்புளங்கள் போன்றவற்றை குணமாக்கும்.

நெல்லி வேர்:
வாந்தி, ருசியின்மை, மலச்சிக்கல், ஆகியவற்றை குணமாக்கும். உடலுக்கும் குளிர்ச்சி தரும். இருமல், சளி, போன்றவற்றைக் குறைக்கும். உடலை பலப்படுத்தும். நெல்லிக்காய் தைலம் தேய்த்து தலை முழுகினால் கண்கள் பிரகாசமாக இருக்கும். பொடுகு கட்டுப்படும் முடி உதிர்தல் தடுக்கப்படும்.

நல்ல நெல்லி முள்ளியது நாக்குக் குருசிதரும்
அல்லல்விரி பித்தம் அகற்றுமதை- மெல்லத்
தலைமுழுகக் கண்குளிருந் தாவுபித்த வாந்தி
இலையிழிமே கங்களும் போம்என்.

– தேரையர்

மூப்புளகா யந்தணிந்து மோகம் பிறக்குமிள
மாப்பிளை போலேயழகு வாய்க்குமே- சேப்புவருங்
கோமய முறுங்கறியை கொள்ளவி ரண்டுபங்கா
யாமலக முண்ணமுறை யால்”

-தேரையர்.

இதனுடைய பொருள்:
மூப்பு அடைந்தவர்கள், இளமையான தோற்றம்பெற்று மாப்பிளைப்போல் அழகுடன் விளங்க, நெல்லிக்கனியை பாகஞ் செய்து உண்ண வேண்டும். அமிர்தத்தை ஒத்தது நெல்லி என்று சித்தர்கள் புகழ்கின்றனர் . இதனாலேயே இதனை கற்ப மூலிகை என்று கூறுகின்றனர்.

வைட்டமின்-சி:
நெல்லிக்காயில் வைட்டமின்-சிஅதிக அளவில் உள்ளது. ஆரஞ்சு பழத்தை விட 20 மடங்கு வைட்டமின்-சி நெல்லியில் உள்ளது. நெல்லிக்காயை காய வைத்த பின்பும் வைட்டமின்-சி அளவு குறைவதில்லை.வைட்டமின்-சி, இருமல், சளியை குறைப்பதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. தினமும் ஒரு நெல்லி உண்பதால் நமக்கு இந்தப் பலன்கள் கிடைக்கும்.

ஆன்டி-ஆக்ஸிடென்ட்:
நெல்லி ஒரு சிறந்த ஆன்டி-ஆக்ஸிடென்ட்டாக செயல் படுகிறது. உடலை நச்சுத் தன்மையில் இருந்து பாதுகாக்கிறது. இதனால் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இளவயதில் கிழத் தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது. நெல்லிக்காயை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையோடு வாழலாம்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும்:
நெல்லிக்காய் பித்த நோய்களை குணமாக்கும். ஜீரண சக்தியை தூண்டி விடும். தலைச்சுற்றல், மயக்கம் போன்றவற்றை குணமாக்கும்.

அழகு மேம்படும்:
நெல்லிக்காயில் உடலுக்கு தேவையான பாஸ்பரஸ்,இரும்புச்சத்து, கால்சியம் முதலியவை அதிக அளவில் உள்ளதால் உடலுக்கு வலிமை கிடைக்கிறது. நெல்லிக்கனியில் உள்ள அஸ்கார்பிக் ,போலிக் அமிலத்தை போலீனீக் அமிலமாக மாற்றுகின்றது.இந்த அமிலம் பியூர்ன், பைரிமிடைன் ஆகிய இரு நைட்ரோஜென் பேஸ்களையும் உயிர் உற்பத்தி செய்கின்றது. இவை நியூக்ளியோ புரதத்தை உண்டாக்குவதன் மூலம் புரதச் சேர்க்கை நடைபெறச் செய்து உடலின் சாதாரண செல்கள் நன்கு வளரச் செய்கிறது. மேலும் செல்களின் மறு உற்பத்தியும் அஸ்கார்பிக் அமிலத்தால் நடைபெறுகிறது. இதனால் உடல் வலிமை பெற்று அழகு உண்டாகிறது.

இரத்த சோகை:
இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சிக்கும் முதிர்ச்சிக்கும் அஸ்கார்பிக் அமிலம் தேவை. அஸ்கார்பிக் அமிலம் நெல்லியில் அதிகம் உள்ளது.இது இரைப்பையில் உள்ள ஹைட்ரோகிளோரிக் அமிலம் முன்னிலையில் பெர்ரிக் ஆயத்தை, பெரோஸ் அயமாக மாற்றுகிறது. இப்படி மாற்றப்படுவதனால் இரும்புச்சத்து வெகு எளிதில் இரைப்பையினால் உறிஞ்சப்படுகிறது. இதனால் ரத்த சோகை குணமாகிறது.

புண்கள் ஆறுவதற்கு:
வைட்டமின்-சி சத்து நெல்லிக்காயில் அதிகம் உள்ளதால் புண்களை விரைவில் ஆற்றுகிறது.

இதயத்திற்கு:
நெல்லிக்காயில் கால்சியம் அதிக அளவில் உள்ளது. இது இதய தசைகளின் சுருங்கி விரியும் தன்மைக்கு உதவுகிறது. மேலும் தமனி நாளச்சுருக்க நோயினை தடுக்கவும். அதே நேரம் நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.

சித்தர்கள் நமக்கு புரிய வைத்த காயா கர்ப்ப மூலிகையாம் நெல்லியை உண்டு நோய் நொடியின்றி நூறாண்டு வாழ்வோம்.

Any information published on this website is not intended or implied to be a substitute for professional medical advice, diagnosis or treatment. All content, including text, graphics, images and information, contained on or available through this website id for general information purpose only. You should not take any action before consulting with a healthcare professional.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments