Tuesday, April 26, 2022
Home Health & Fitness Herbs & Medicines கரிசலாங்கண்ணி - மரபுசார் மருத்துவம்

கரிசலாங்கண்ணி – மரபுசார் மருத்துவம்

சித்தர்கள் அனைவரும் காயகற்ப மூலிகைகள் பற்றி அதிகம் கூறியுள்ள போதிலும் போகர் சப்த காண்டம் 7000-த்தில் கூறப்பட்டுள்ள காயகற்ப மூலிகைகள் மிகவும் சிறப்புடையது. அவற்றுள் மிகச் சிறப்பு வாய்ந்தது கரிசலாங்கண்ணி.

“கேளப்பா கரிசாலைக் குப்பைமேனி
உன்னப்பா மண்டலந்தான் நோய்மூன்று போம்!”

வாத, பித்த, கப மாறுபாட்டால் ஏற்படும் நோய்கள் அனைத்தும் கரிசலையை ஒரு மண்டலம் உண்டால் விலகும் என்பது இப்பாடலின் பொருள்.கரிசல் என்பது தங்கத்தைக் குறிக்கும். மேனிக்கு பொன்னிறத்தை தரும் மூலிகை என்று பொருள். இது கையாந்த கீரை, கரிக்கை, கரிசாலை என்றும் கூறலாம். இதில் நான்கு வகைகள் உள்ளன. நீளம், மஞ்சள், சிவப்பு, வெள்ளை. இவற்றுள் எங்கும் கிடப்பது வெள்ளை கரிசலாங்கண்ணி மட்டுமே. மஞ்சள் கரிசலாங்கண்ணியை பொற்றலைக்கையான் என்று அழைப்பார்கள். இதனை ஒரு மண்டலம் உட்கொண்டால் சருமம் பொன்னிறச் சாயை பேரும் என்பதால் இதற்கு இந்தப் பெயர்.

“திருவுண்டாம் ஞானத் தெளிவுண்டா மேலை
யுருவுண்டா முள்ளதெல்லா முண்டாங் – குருவுண்டாம்
பொன்னாகத் தன்னாகம் பொற்றலைக்கை
யாந்தகரைத் தன்னாகத் தின்னாகந் தான்.

— தேரைவெண்பா

பொற்றலைக்கையானை ( மஞ்சள் கரிசலாங்கண்ணி) கறியாக சமைத்து உன்ன அறிவும், தெய்வம் திருவும் உண்டதாகும் என்று இப்பாடல் விளக்குகிறது.

மஞ்சள் மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணியின் மருத்துவ பலன்கள் பலவற்றை இன்றைய அறிவியல் உலகம் ஆய்வுக்கு உட்படுத்தி முடிவுகளை அறிவித்துள்ளது.

கல்லீரலை பலப்படுத்தும் குணம் , பித்த நீரைப் பெருக்கி உடலுரமாக்கும் பண்பு, வீக்கங்களைக் குறைக்கும் பண்பு.

மேற்கண்ட பண்புகளால் தீரும் நோய்கள் பல:

மஞ்சள் காமாலை:
கல்லீரல் பாதிப்பு மற்றும் வீக்கம் ஆகியவற்றை குறைப்பதற்கு கரிசலாங்கண்ணி மிகவும் உதவுகிறது. இதனுடன் கீழாநெல்லி சேர்த்து உபயோகப்படுத்தும் போது மஞ்சள் காமாலை நோய் குணமாகிறது என்று ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 10 கிராம் மிளகாய் நன்கு அரைத்து பின் இதனை மோரில் கலந்து காலை மாலை இருவேளை அருந்தினால் மஞ்சள் காமாலை நோய் குணமாகிறது. இது தவிர கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு கல்லீரல் செயல்பாடுகளை சரி செய்கிறது. பசியின்மை மற்றும் மூல வியாதியை குணமாக்குகிறது.

பெண்களுக்கு:
இளம் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான உதிரப்போக்கை கரிசலாங்கண்ணி சாறு குணப்படுத்துகிறது.
ஆயுர்வேதத்தில் இதனை பிரிங்கராஜ் என்று அழைப்பர் . இது தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடி உதிர்தலை தடுக்கிறது. தலைமுடிக்கு பளபளப்பை ஊட்டுகிறது. மேலும் தலைமுடி கருப்பாக வளர்வதற்க்கு உதவுகிறது.

கரிசலாங்கண்ணி இலையை காய வைத்து பொடித்து பின் தேங்காய் எண்ணேயில் போட்டு காய்ச்சி வைத்துக் கொண்டு தினமும் தலைமுடிக்கு உபயோகப்படுத்தலாம். இதனால் தலைமுடி கறுத்து அடர்ந்து நீண்டு வளரும். முடி உதிராது.

இருமல்:
கரிசலாங்கண்ணி சாறு தொண்டை சளி, நெஞ்சு சளி மற்றும் இருமல் ஆகியவற்றை குணப்படுத்துகிறது. இதன் இல்லை சாறும், நல்லெண்ணெய் சம அளவு கலந்து காய்ச்சி பக்குவமாக எடுத்து 5ML வீதம் தினமும் உட்கொண்டால் இருமல் குணமாகும்.

உடல் பருமன்:
கரிசலாங்கண்ணி கீரையாக உணவுடன் சேர்த்து உண்டு வந்தால் பருத்த உடல் இளைக்கும். அதே நேரம் உடலுக்கு பலத்தைத் தரும் .

நரை, திரை, மூப்பு இவற்றை தடுக்கும் பண்பு கரிசலாங்கண்ணிக்கு உண்டு. இதனாலேயே இதனை காயகற்ப மூலிகை என்று சித்தர்கள் அழைத்தனர்.

Any information published on this website is not intended or implied to be a substitute for professional medical advice, diagnosis or treatment. All content, including text, graphics, images and information, contained on or available through this website id for general information purpose only. You should not take any action before consulting with a healthcare professional.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments