Sunday, October 2, 2022
Home History Temples ஆலய நிர்மாணம்

ஆலய நிர்மாணம்

நமது நாட்டில் சைவ ஆகமங்களை ஒட்டியும், சாக்தேயம், பாஞ்சராத்திரிகம் , தந்திரம் முதலியனவற்றையும் ஒட்டியும், ஆலயங்கள் நிர்மாணம் செய்யப்படுகின்றன. சிவா ஆகமங்கள் இருபத்தேட்டோடு சைவ உபகமங்கள் நூற்றிப்பதின்மூன்று உள்ளன. சாக்தேய ஆகமங்கள் 64 ங்கு ஆகும். பஞ்சராத்திராகமங்கள் 108 என்பர். அவற்றுள் முக்கியமானவை பாஞ்சராத்திரிமும், வைகானஸமுகமாகும். குமாரதந்திரம் முதலிய தந்திர நூல்களை மேற்கொண்டு எழுந்த கோயில்களும் பல உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஆலய நிர்மாணம், பிரதிஷ்டை, நித்திய பூஜை, நைமித்திக பூஜை, திருவிழாக்கள், தீக்கைகள்,மந்திரங்கள், முதலியவற்றைப் பற்றி விளக்கமாகக் கூறுகின்றன.

எந்த ஆகமத்தை ஒட்டி ஓர் ஆலயம் நிறுவப்பட்டதோ அந்த ஆகமத்தை ஆதாரமாகக் கொண்டு பூஜைகள் முதலியன நடைபெற்று வருகின்றன. ஆதலால் ஆலயப்பூஜை, பிரதிஷ்டை முதலியன பலவிதமாக நடந்து வருகின்றன. ஆலய நிர்மாணங்கள் ஆவர்த்தம், அநாவர்த்தம், புனராவர்தம், அந்தரிதம் என நான்கு வகைப்படும்.

ஆவர்த்தம்:

ஒரு ஆலயத்தைப் புதிதாகக் கட்டிமுடித்து முதன்முதலாக விக்கிரகஸ்தாபனம் முதலியன செய்து அனுக்னஞ முதல் கும்பாபிஷேகம் வரை செய்து முடிப்பதாகும்.

அநாவர்த்தம்:
ஆற்றுநீர்ப் பெருக்காலோ , விடாமழை பொழிந்தாலோ , பூமி அதிர்ச்சிகளாலோ, மணல் மூடியதாலோ ஆலயங்கள் அழிந்து போனால் திரும்பவும் அதை கட்டிமுடித்து விக்கிரகங்கள் முதலியவற்றை புதுப்பித்துச் சீர்திருத்தம் செய்வதாகும்.

புனராவர்த்தம்: 
இதனை ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் என்பர். நடைமுறையில் இருக்கும் ஆலயத்தில் காலப்போக்கால் எவையேனும் சில பாகங்கள் சிதைந்து போனால், அவற்றைப் பூர்த்தி செய்து விக்ரகங்கள் அழைத்தது அசையாது இருக்கும்படி மருந்துகள் சார்த்தி, எல்லாக் கிரியைகளையும் இனிது நடத்தி, யாக சாலைகளில் எழுந்தருளப் பண்ணியிருந்த மூர்த்திகளைத் திரும்பவும் கோயில் விக்ரகங்களில் ஆவாஹனம் பண்ணுதலாம். எட்டு சக்திகளோடு இறைவனை இணைப்பதால் அஷ்டபந்தனம் என இதனை கூறுவார்.

அந்தரிதம்:
சில ஆலயங்களில் திருடுதற் பொருட்டு அசுத்தம் நிறைந்த பொருள்களோடு திருடர்கள் புகுந்து ஆலயத்தை அசுத்தப்படுத்தி விடுகின்றனர். அந்த அசுத்த நீக்கத்தின் பொருட்டுச் சம்ப்ரோட்சணம் செய்யப்படும். அதுவே அந்தரிதம் ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments