Sunday, October 2, 2022
Home Health & Fitness Herbs & Medicines அருகம்புல்- மரபுசார் மருத்துவம்

அருகம்புல்- மரபுசார் மருத்துவம்

இந்த உலகில் நிறைய புல் வகைகள் உள்ளன. ஆனால் அருகம்புல்லுக்கு இருக்கும் சிறப்பு வேறு எந்த புள் வகைகளுக்கும் இல்லை. கடும் கோடையில் அருகம்புல் தீந்து கருகிவிடும். ஒரு நாள் மழை பெய்தால் போதும் மறுநாள் அருகம்புல் துளிர்த்து எழுவதைப் பார்க்கலாம். இவ்வரிய குணம் அருகம்புல்லின் விசேஷ தன்மையாகும். நாய், பூனை, போன்ற பிராணிகள் அருகம்புல்லை உண்டு தங்களை குணப்படுத்திக் கொள்கின்றன. அருகம்புல்லை உண்பதால் தான் குதிரை வேக சக்தியை பெறுகிறது.


போகாத தோஷவினை போகப் பிணியகன்று
தேகாதி யெல்லாஞ் செழிக்கவே- வாகாய்
அடர்தந்தை பிள்ளைக்கு கனிய தலாலத்
திடமாங் கணபதிபத் ரம்.

-தேரன் வெண்பா

அருகம்புல்லானது முக்குற்றங்களான வாத, பித்த, கபத்தால் ஏற்படும் நோய்களை களைந்து உடலுக்கு ஏற்படும் நோய்களை களைந்து உடலுக்கு ஓட்டம் தரும் என்பது இப்பாடலின் பொருள். தெய்வீக மூலிகையாக போற்றப்படும் அருகம்புல்லுக்கு பற்பல மருத்துவ குணங்கள் இருப்பது ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

பொதுவாக அருகம்புல் அசுத்தமான பகுதிகளில் வளராது. இதனை சித்தர்கள் விஷ்ணு மூலிகை என்று அழைக்கின்றனர். சிரியவர்களுக்கும், பெரியவர்களுக்கும் ஏற்ற இந்த அருகில் மருத்துவக் குணங்களை அகத்தியர் பால் வாகடத்திலும், வர்ம நூல்களிலும் தெளிவாக விளக்கியுள்ளார்.

அருகம்புல்லின் மருத்துவ குணங்கள்:
* உடல் உரமாக்கியாகவும், நரம்புகளுக்கு பலத்தை கொடுக்கும் டானிக்காகவும் செயல்படுகிறது.
* உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
* அருகம்புல்லில் கிளோரோபில் என்ற பச்சையமும், புரதச்சத்தும். தாதுக்களும், இருப்பதால் இரத்த சிவப்பணு உற்பத்தியை பேருக்கும் தன்மை கொண்டது.
* நோய் எதிப்புச் திறன் கொண்டது. நோய் வருமுன் உடலை காக்கும் தன்மை கொண்டது.

அருகம்புல் சாறு தயாரிக்கும் முறை:
தினமும் அருகம்புல் இலைப்பகுதியை புதிதாகப் பறித்து, உரலில் இட்டு இடித்து அல்லது மிக்ஸியில் இட்டு சாறு பிழிந்து 100 ml அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். காலை உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

அருகம்புல்லின் சாறு குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்: 
* அருகம்புல் சாற்றைக் குடிப்பதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகமாகும். நோய் எதிர்ப்பு சக்தியும், இரத்த விருத்தியும் ஏற்படும்.
* தேவையற்ற கொழுப்பை கரைப்பதால் அதிக உடல் பருமன் குறைகிறது.
* தினமும் இந்த சாறை அருந்தினால் கொலஸ்ட்ரோல் கட்டுக்குள் வரும்.     மாரடைப்பு ஏற்படாது.
* வயிற்றில் உள்ள புளிப்புத் தன்மையை மாற்றி குடல் புண்ணை         விரைவில் குறைக்கும்.
* நரம்புத் தேர்ச்சி, வலிப்பு நோய் குணமாகும்.
* கை, கால் குடைச்சல், மூட்டு வலி, உடல் வலி முதலியன குணமாகும்.
* சளி, சைனஸ்,ஆஸ்துமா போன்றவை விரைவில் குணமாகும்.
* நீர் கடுப்பு, நீர் சுருக்கைக் குணப்படுத்தும்.

கண் நோய் நீங்க:
அருகம்புல் சாறு கண் பார்வை தெளிவடையவும், கண்ணின் சிவப்புத் தன்மை மாறவும் சிறந்த மருந்தாகும்.

நினைவாற்றலை தூண்ட:
அருகம்புல்லை நிழலில் உலர்த்தி போடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.

தோல் நோய்கள்: 
அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தொழில் உண்டான சொறி, சிரங்கு, ஆறாத புண்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும். அருகம்புல்லுடன் மஞ்சளும் பச்சை பயிரும் சேர்த்து அரைத்து மெழுகு பூசி குளித்து வந்தால் தோல் நோய்கள் வராமல் பாதுகாக்கலாம். உடலுக்கு நல்ல அழகையும் தரும். நோய்கள் அனைத்தையும் அழுக்கும் குணமுள்ளதால் சித்த, ஆயுர்வேத,யுனானி மருத்துவத்தில் அருகம்புல் முதலிடம் வகிக்கிறது.

நரம்பு தளர்ச்சி நீங்க:
அருகம்புல் அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அருகம்புல் சாறு தினமும் அருந்தி வந்தால் கை கால் நடுக்கம், வாய் குளறல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
பொதுவாக எல்ல வயதினரும் நோயுற்று இருப்போரும் நோய் இல்லாதவர்களும் அருகம்புல் சாறு குடிக்கலாம். இது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது. எந்த எதிர் விளைவும் இல்லாதது. மற்ற எந்த மருந்துகள் சாப்பிடும் போதும் இதனை அருந்தலாம்.

Any information published on this website is not intended or implied to be a substitute for professional medical advice, diagnosis or treatment. All content, including text, graphics, images and information, contained on or available through this website id for general information purpose only. You should not take any action before consulting with a healthcare professional.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

- Advertisment -friends shop firstfriends shop firstfriends shop firstfriends shop first

Most Popular

Recent Comments